Tuesday 28 May 2013

அரும்பேறுகள்

வள்ளலார் பெற்ற அரும்பேறுகள்

யான் புரிந்த பெருந்தவம் யாதோ என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
ஊன் மனம் முருக எந்தனைத் தேற்றி ஒளியுருக் காட்டிய தலைவா
'ஏன் மனமிரங்காய் இன்று நீ ' என்றேன்  என்ற சொல் ஒழியடங்கு தன் முன்
ஆன் மகிழ் கன்றென அணைந்தெனை எடுத்தாய் அருட் பெருஞ் ஜோதி

தந்தாய் இன்னும் தருகின்றாய் தருவோய் மேலுந் தனித் தலைமை
எந்தாய் நினது பெருங் கருணை என்னென்று உரைப்பேன் இவ்வுலகில்
சிந்தா குலந் தீர்த்தருள்வாய் என நான் சிறிது  குவு முன்னே  என்பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே !

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
         நவிற்றகலைச் சரிதம்  எல்லாம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ
        விழித்து இது பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே
         காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய  மெய்ப் பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத் தேற்ற
         வயங்கு நடத்தரசே என் மாலை அணிந்தருளே

எவ்விடத்தே எவ்வுயிர்க்கும் இலங்கு சிவமொன்றே
        என்னாணை  என்மகனே  இரண்டிலை ஆங்கே
செவ்விடத்தே  அருளொடு சேர்த்து இரண்டெனக் கண்டறி நீ
       திகைப்படையேல் என்றெனக்குச்  செப்பியச் சற்குருவே
அவ்விடத்தே யுவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி
        அங்கும் இங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடத்தே சிற்சபையிடத்தும் பொற்சபையினிடத்தும்
         ஓங்கு நடத்தரசே என் உரையும்  அணிந்தருளே

No comments:

Post a Comment