Friday 1 November 2013

இன்னும்..........


எணங் குறியான் இயல்குறியான் ஏது நினையாதே
      என் பாட்டுக் கிருந்தேன் இங்கெனை வலிந்து நீயே 
மணம் குறித்துக் கொண்டாய் நீ கொண்டது தொட்டேனது 
      மனம் வேறு பட்டதில்லை, மாட்டாமையாலே 
கணங் குறித்துச் சிலப் புகன்றேன் புகன்ற மொழி எனது 
     கருத்தில் இலை உன்னுடைய   கருத்தில் உண்டோ, உண்டாயில் 
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றுங் குறியான் என்று அறவோர் 
     கூறிடும் அவ்வார்தை இன்று மாறிடுமே அரசே !

நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் 
     நாடிய தத்துவத் தோழி நங்கையர் என்வசத்தே 
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கெழுந்த 
    வெகுளியினால் சிலப் புகன்றேன் வேறு நினைத்தறியன் 
"தூயவரே  வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் 
    சூழ் விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே 
தீயவர் ஆயினும் குற்றம் புரியாது  புகன்றால் 
    தீ மொழி  அன்றெனத் தேவர் செப்பியதும் உளதே "

நாம் யாரையாவது திட்டிவிட்டோம் என்றால் நாம் பேசிய வார்த்தைகளை  நாமே  மறந்து விடுவது நம்மின் சிலருக்கு வழக்கம் . ஆனால் நம்மிடம் திட்டு வாங்கியவர் மறந்து விடுவாரா என்றால் கண்டிப்பாக அவரால் மறக்க முடியாது. மறக்க முடியாமல் இருப்பவரிடம் போய், "திட்டின  நானே மறந்துட்டேன் நீ போய் நினைவில் வெச்சிக்கலாமா " என்று கேட்ப்பதுதான் சரியா, அல்லது அதுதான்  முறையாகுமா ? திட்டு வாங்கின அவனுக்கு வலிக்குமா, திட்டின நமக்கு மனசு வலிக்குமா என்றால் அதிகம் அவனுக்குத்தான் வலிக்கும்.
அவனுக்குத்தான் நம்மின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நினைவில் இருக்கும் "நான் மறந்துட்டேன், நீ நல்லவன், மற்றவர்களின் குணத்தை மட்டும் தான் பார்ப்பே , குற்றத்தை கண்டுக்க மாட்டேன் என்று  அறவோர்கள் சொல்றாங்களே அது பொய்யாகப் போய்விடுமே !" என்று இறைவனைப் பார்த்து வள்ளலார் கேட்க்கின்றார்.
எவ்வளவு எளிதாகவும் எளிமையாகவும் வார்த்தைகளை கையாண்டு, பாமரர்களுக்கும், இறைவனை மிகமிக எளிமையானவனாக காட்டி , நீயும் அவனை காணலாம் , உன்னாலும் அவனை அடைய முடியும் என்பதனை இப்படி பலப் பாடல்கள் முலம் எடுத்துக்காட்டி இருக்கிறார் நம் வள்ளல் பெருமான் அவர்கள்.     

Saturday 8 June 2013

பத்து


வள்ளலார் பசியின் கொடுமையைப் பற்றி மிக விளக்கமாக ஜீவகாருண் யத்தில் சொல்லியிருப்பார். பசி நமக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றது, மாற்றங்களை யெல்லாம் உண்டாக்குகிறது என்பதனை அவரைத்தவிர வேறுயாராலும் விளக்கம் தரமுடியுமா என்றால் முடியாது என்பதனை விட தருவதற்கு இதைவிட எளிமை நடை இல்லை என்பதே என்னின் கருத்து. பசி வந்திட பத்தும் பறந்து போம். என்ற வார்த்தையை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். பத்து என்பது எவைகளைக் குறிக்குமோ அவற்றைப் பற்றித்தான் விளக்கமாக சொல்லியிருப்பார். இது நல்வழி என்ற நூலைப்படித்தவர் களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்ற நினைக்கிறேன்.

சரி   பத்து  என்பவை எவைஎவை என்று இப்போது பார்ப்போம்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திட பறந்து போம்

மன்னிக்கவும் மீண்டும் ஒருமுறை வள்ளலாரின் ஜீவகாருண் யத்தை படித்துப் பாருங்கள். 

Tuesday 28 May 2013

அரும்பேறுகள்

வள்ளலார் பெற்ற அரும்பேறுகள்

யான் புரிந்த பெருந்தவம் யாதோ என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
ஊன் மனம் முருக எந்தனைத் தேற்றி ஒளியுருக் காட்டிய தலைவா
'ஏன் மனமிரங்காய் இன்று நீ ' என்றேன்  என்ற சொல் ஒழியடங்கு தன் முன்
ஆன் மகிழ் கன்றென அணைந்தெனை எடுத்தாய் அருட் பெருஞ் ஜோதி

தந்தாய் இன்னும் தருகின்றாய் தருவோய் மேலுந் தனித் தலைமை
எந்தாய் நினது பெருங் கருணை என்னென்று உரைப்பேன் இவ்வுலகில்
சிந்தா குலந் தீர்த்தருள்வாய் என நான் சிறிது  குவு முன்னே  என்பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே !

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
         நவிற்றகலைச் சரிதம்  எல்லாம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ
        விழித்து இது பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே
         காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய  மெய்ப் பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத் தேற்ற
         வயங்கு நடத்தரசே என் மாலை அணிந்தருளே

எவ்விடத்தே எவ்வுயிர்க்கும் இலங்கு சிவமொன்றே
        என்னாணை  என்மகனே  இரண்டிலை ஆங்கே
செவ்விடத்தே  அருளொடு சேர்த்து இரண்டெனக் கண்டறி நீ
       திகைப்படையேல் என்றெனக்குச்  செப்பியச் சற்குருவே
அவ்விடத்தே யுவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி
        அங்கும் இங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடத்தே சிற்சபையிடத்தும் பொற்சபையினிடத்தும்
         ஓங்கு நடத்தரசே என் உரையும்  அணிந்தருளே

Monday 27 May 2013

தானம் தருமம்


நம்மில் பலருக்கு இந்த தானம் தருமத்தின் அர்த்தம் சரியாகப்              புரியவில்லை.  அப்படியிருக்கையில் நம்மின் சந்ததிக்கு எப்படி சரியான அர்த்தம் புரியும். தானம் என்பது நாம் நினைக்கின்றது போல் மிகமிக எளிமையானது அன்று. தான்+ஆம்  =  தானம், தன்னுடைய  அகம், அங்கங்களைக் குறிக்கும். யாரொருவர் தன்னுடைய அகத்தையும் அதாவது 

Sunday 26 May 2013

இப்படியும்


             இந்த மாய உலகத்தில் இருக்கின்ற நாம் இந்த வாழக்கையை மிக சிறப்பாக  நடத்துவதற்க்கு பொருள் ஈட்டியே யாக வேண்டும். அந்தப் பொருளை ஈட்டுவதற்காக நாம் நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சில வேடங்களைப் போட்டே யாக வேண்டியிருக்கிறது. பணிந்தும், தணிந்தும், சில இடத்தில் குழைந்தும், கோப்பப்பட்டும் இருக்க வேண்டியுள்ளது . அதனால் துயரங்களும், துன்பங்களும் நம்மை அழுத்துவதும் உண்டு .  மனதில் இந்த அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற இன்னொரு உணர்வு.  இதுவும் சதவிகிதத்தில் மாறுப்பட்டிருக்கும்.  50க்கு மேல் போனால் "பாதி " என்றும் , 100 ஆனால் "முழுவதும் " அதுவாக மாறிவிடுகிறோம் . நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
  அந்த 100 எட்டாமலும், அறையைத் தாண்டாமலும் நம் மனதை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானாலும் அந்த இறைவனை சரணடையமால் வேறு யாரின் துணையை நாடுவது ?  இங்கு யார்தான் நமக்கு உதவுவார்கள் ?

 நம் "மனத்தின் தன்மை!"யையும் அதனை எப்படி இறைவனில் திருப்புவதை என்பதனையும் இப்போது பார்ப்போம்.

      நேரா அழுக்குத்துணியாகில் நின்றனை நேரில் கண்டும்
      பாராதவர் போலிருப்பார் உடுத்தது பட்டெனிலோ வாரும்
      வாராதிருப்பதேன் ...........



   காயார் சரிகை களிங்கம் உண்டேல் அக்களிங்கம் கண்டால்
   நீயார் நின்பேரெது நின்வூரெது .........

Monday 22 April 2013

புரிந்து ..


          நம்மைப் போன்று சாதாரண மனிதர்களையே  நம்மால் உடனே புரிந்துக்  கொள்வது இயலாது. உடனேக் கூட இல்லீங்க பல வருடங்கள் பழகியிருந்தாலும் முழுமையாக அவர்களை பற்றி அறிந்துக்கொண்டோம்  என்று சொல்லிட முடியாது. யாரையோ கூட புரிந்துக் கொள்ள வேணாங்க நம்மைப் பெற்றவர்களையும் புரிந்துக்கொள்ள முடியலே நாம் பெற்ற பிள்ளைகளையும் நம்மால் புரிந்துக் கொள்ள முடியலே. இப்படி நம்மின் அறிவு நிலை இருக்கையில் அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் போன்றோரை எப்படி புரிந்துக்கொள்ள முடியும். அவர்கள் பற்றி அதாவது அவர்களின் வரலாரை படித்துத் தெரிந்துக்கொள்ளலாம்.  அவ்வரலாறும்  முழுமையும்சரியானது  சொல்லிடவும் முடியாது. அப்படியிருக்கையில் அவர்கள் நமக்கு அருளிச் சென்ற பாடல்களைப்  படித்து விட்டு இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்றும்  நாம் நினைத்திடவும்  கூடா து .

             வள்ளலாரின் பாடல் சிலவற்றை மட்டுமே படித்து விட்டு அவர் இப்படியெல்லாம் இருந்திருப்பார் என்று தயவு செய்து நினைத்து விட வேண்டாம். வள்ளலார் " தான் நிறைந்த குறைகள் கொண்டவராக தன்னை நினைத்துப் புலம்பியிருப்பார்" இறைவனிடம். அதாவது " கருணை  ஒன்றில்லாக் கல்மனக்குரங்கேன் .., என்றும், வஞ்சக் கருவுளக் கடையேன், என்றும், கல்லை வெல்லவும் வல்ல  என் மனந்தான் ,  பொல்லார்க்கெல்லாம் பொல்லவன்," என்றும் இப்படி பலப் பாடல்களில் சொல்லியிருப்பார் .
             அவர் இதுப்போன்றக் குற்றங்குறைகளுக்கு  உரியவரா? சிந்தித்துப் பார்ப்போம் .
அவர் எவற்றையெல்லாம் பகிர்ந்துக் கொடுக்க தன் மனதையும் அழைக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

வள்ளலாங் கருணை மன்றிலே அமுதவாரியைக் கண்டன மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் படியாடலாம் அடிக்கடி வியந்தே
உள்ளெலாம் நிரம்ப உண்ணலாம் உலகிலோங்கலாம் உதவலாம் உறவாம்
கள்ளெலாம் உண்ட வண்டென இன்பங் காணலாம் களிக்கலாம்  இனியே .

அடுத்து இன்னும் ஒரு பாடல்

 விண்ணெலாம் கலந்த வெளியிலானந்தம்  விளைந்தது விளைந்தது மனனே
கண்ணெலாம் களிக்கக்  காணலாம் பொதுவிற் கடவுளே என்று நம் கருத்தில்
எண்ணலாம்  எண்ணி எழுதலாம் எழுதி யேத்தலாம் எடுத்தெடுத்து வந்தே
உண்ணலாம் விழைந்தோர்க்கு உதவலாம் உலகிலோங்கலாம் இனியே

இப்போது சொல்லுங்கள் அவருக்கு ஏதாவது குறை இருந்திருக்குமா?












Saturday 6 April 2013

தமிழின்...


தமிழின்...

முன்புறு  நிலையும் பின்புறு நிலையம்
            முன்னி நின்றுளமயக்  குறுங்கால்
அன்புரு நிலையால் திருநெறித்  தமிழ்கொண்
             டைய நீத் தருளிய  அரசே
என்பு பெண்ணுருவோ  டின்ன யிரது  கொண்
             டெழுந்திடப்  புரிந்துல  கெல்லாம்
இன்புறப்  புரிந்த மறைத் தனிக் கொழுந்தே
              என்னுயிர்க்  குயிர்  எனுங் குருவே

Sunday 24 March 2013

நாம்


   நம்மின் மனம் எப்படிப்பட்டது ? அது எப்படி யெல்லாம் நம்மை ஆட்டிப்படைக்கின்றது? நாம் அதைப்பற்றி நினைக்காதே என்றால் அதைப் பற்றித்தான் நினைக்கும். நினைவில் வைத்துக்கொள் என்றால் மறந்துவிடும். ஆசையை விடு என்றால் அதிகமான ஆசையை வளர்த்துக்கொள்ளும் . இப்படி நம் புத்தி சொல்வதைக்  கேட்கவே கேட்காது.  வள்ளலார் ஒரு பாடலில் சொல்லுவார்,
 உலகத்தில் குரங்கை எல்லாரும் ஆடவைக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன் ஆடவைத்தும்  பார்த்திருக்கின்றேன். ஆனா இந்த மனம் என்கிற கிழக்குரங்கு இப்படி என்னை ஆட்டிப் படைக்கின்றதே! நிரம்பவும் வியப்பக்குறியதாக இருக்கின்றதே!

இதோ அந்தப் பாடல்
                                     தேட்டக்கண்டோர்  மொழிபாகா உலகில் சிலர் குரங்கை
                                     ஆட்டக்கண்டேன் அன்றி  அக்குரங்கால் அவர் ஆடச்சற்றும்
                                     கேட்டுக் கண்டேனிலை  நான்ஏழை நெஞ்சக் கிழக்குரங்கால்
                                      வேட்டுக்கொண்டாடுகின்றேன் இது சான்ற வியப்புடையதே


இப்படியும் இருக்கலாம்

இப்படியும் இருக்கலாம்


குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
          கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
           மெய் யுரையைபொய்  யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்தமதம்  சமயம்எலாம் பொய் பொய்யே  அவற்றில்
            புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
செறித்திடு சிற்  சபைநடத்தைத்  தெரிந்து துதித்திடுமின்
             சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே

வள்ளலார்  ஏன் சத்தியமெல்லாம் போடுகின்றார். தான் அடைந்த சுகங்களை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற நல்ல உயர்ந்த நோக்கத்தால் தான். "உங்களால் எனக்கு ஒரு உதவியும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. அதாவது உங்களிடமிருந்து நான் ஒரு உதவியும் எதிர்பார்க்கவில்லை. அதனால் என்னுடைய உண்மையான  வார்தைகளை பொய்யுரை என்று நினைத்து விடாதீர்கள். மனிதர்களால் வகுக்கப்பட்ட மதமும், சமையங்களும் பொய்யானது. முற்றிலும் பொய்யானது . அவற்றில் போய் மாட்டிக் கொள்ளாதீர். சிவம் ஒன்றே  பொருள் என்று உணர்ந்து ஞான சபை நடனத்தை தெரிந்து துதித்திடுங்கள். எல்லா நன்மைகளும் கண்டிப்பாக அதே நாளில் வந்து சேர்ந்திடும்" நெறிமாறி செல்லும் இந்த மனமெனும் குரங்கினால்  மருண்டுப்போயிருக்கும் நாமக்காகத்தான் இதனை சொல்கின்றேன். என்ற பொருள் படும் வார்த்தைகள்  தான் " குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற............."

முன்னுரை

முன்னுரை
                       வள்ளலார் 5818க்கும் மேற்ப்பட்ட  பாடல்களும், 200 க்கும்  மேற்ப்பட்ட தனிப்பாடல்களும் அடங்கிய  திருவருட்பா என்ற மாமறையை அருளியிருக்கின்றார். அவற்றில் 25 அல்லது அதிகபட்சமாக ஒரு 50 பாடல்கள் மட்டுமே பாடப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது . நம்மின் நலனுக்காகவும், நம்மின் மேன்மைக்காவும் பாடப்ப்ட்டப்  பாடல்கள்  ஒராயிரம். அதிலும் நம்மின் நிறைக்குறைகளை சுட்டிக்காட்டி சுய ஆய்வு என்னும் மாபெரும் உள்நோக்குப் பயணத்திற்கும் வழி வகுத்துக்கொடுக்கின்றார். சிலப்பாடல்களில் நம்மை நினைத்து தன்னை கடிந்துக்கொள்வதன் மூலமும் நமக்கு உணரவைப்பார் . ஏன் இப்படி செய்கின்றார் என்றால் நாமும் அவரைப்போன்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். அது மட்டுமல்ல அவரடைந்த சுகத்தினை நாமும் அனுபவிக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தால்.
மிகமிக எளியமுறையில் பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் பாடல்களை அருளியிருப்பார்.

  நான் பலப்பாடல்களை படிக்கும் போது என்னை சிந்திக்கவும், திகைக்கவும், நெகிழவும், உறையவும்  வைத்தன . இவற்றையெல்லாம் எல்லாரும் படித்து  இன்புற வேண்டும், பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

வள்ளலார் வாக்கு
" யானடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே"

  

Saturday 23 February 2013

வள்ளலார்









திருவருட்பா ஆறாம் திருமுறை - வரம்பிலின்பம்



முன்னுரை :

                  பூவைப்பற்றிய பாடல்கள் :  இந்த பூக்களை சூட்டி கொள்ள முடியாது . அறிந்து கொள்ளத்தான் முடியும். உணர கூட முடியாது. தெரிந்ததாக தான் இந்த பிறவியில் இருக்குமேயின்றி உணர்ந்ததாக சொல்லிக்கொள்ள முடியாது. சொல்லவும் கூடாது. 

இவைகளும் பூக்களா என்று வியப்புறலாம் . ஆம் நம்முள் வளர்ந்து மலரக்கூடிய அனைத்தும் பூக்கள் தானே..!


பாடல் :

பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம
          பூஇருபத் தைம்பூ வாய்ப் பூத்துமலர்ந் திடவும்
     நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
          நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
     மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
          வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
     பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
          பகர்த்திடவல் லுநள்அல்லேன் பாராய்என் தோழி. 


விளக்கம் :