Monday 22 April 2013

புரிந்து ..


          நம்மைப் போன்று சாதாரண மனிதர்களையே  நம்மால் உடனே புரிந்துக்  கொள்வது இயலாது. உடனேக் கூட இல்லீங்க பல வருடங்கள் பழகியிருந்தாலும் முழுமையாக அவர்களை பற்றி அறிந்துக்கொண்டோம்  என்று சொல்லிட முடியாது. யாரையோ கூட புரிந்துக் கொள்ள வேணாங்க நம்மைப் பெற்றவர்களையும் புரிந்துக்கொள்ள முடியலே நாம் பெற்ற பிள்ளைகளையும் நம்மால் புரிந்துக் கொள்ள முடியலே. இப்படி நம்மின் அறிவு நிலை இருக்கையில் அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் போன்றோரை எப்படி புரிந்துக்கொள்ள முடியும். அவர்கள் பற்றி அதாவது அவர்களின் வரலாரை படித்துத் தெரிந்துக்கொள்ளலாம்.  அவ்வரலாறும்  முழுமையும்சரியானது  சொல்லிடவும் முடியாது. அப்படியிருக்கையில் அவர்கள் நமக்கு அருளிச் சென்ற பாடல்களைப்  படித்து விட்டு இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்றும்  நாம் நினைத்திடவும்  கூடா து .

             வள்ளலாரின் பாடல் சிலவற்றை மட்டுமே படித்து விட்டு அவர் இப்படியெல்லாம் இருந்திருப்பார் என்று தயவு செய்து நினைத்து விட வேண்டாம். வள்ளலார் " தான் நிறைந்த குறைகள் கொண்டவராக தன்னை நினைத்துப் புலம்பியிருப்பார்" இறைவனிடம். அதாவது " கருணை  ஒன்றில்லாக் கல்மனக்குரங்கேன் .., என்றும், வஞ்சக் கருவுளக் கடையேன், என்றும், கல்லை வெல்லவும் வல்ல  என் மனந்தான் ,  பொல்லார்க்கெல்லாம் பொல்லவன்," என்றும் இப்படி பலப் பாடல்களில் சொல்லியிருப்பார் .
             அவர் இதுப்போன்றக் குற்றங்குறைகளுக்கு  உரியவரா? சிந்தித்துப் பார்ப்போம் .
அவர் எவற்றையெல்லாம் பகிர்ந்துக் கொடுக்க தன் மனதையும் அழைக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

வள்ளலாங் கருணை மன்றிலே அமுதவாரியைக் கண்டன மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் படியாடலாம் அடிக்கடி வியந்தே
உள்ளெலாம் நிரம்ப உண்ணலாம் உலகிலோங்கலாம் உதவலாம் உறவாம்
கள்ளெலாம் உண்ட வண்டென இன்பங் காணலாம் களிக்கலாம்  இனியே .

அடுத்து இன்னும் ஒரு பாடல்

 விண்ணெலாம் கலந்த வெளியிலானந்தம்  விளைந்தது விளைந்தது மனனே
கண்ணெலாம் களிக்கக்  காணலாம் பொதுவிற் கடவுளே என்று நம் கருத்தில்
எண்ணலாம்  எண்ணி எழுதலாம் எழுதி யேத்தலாம் எடுத்தெடுத்து வந்தே
உண்ணலாம் விழைந்தோர்க்கு உதவலாம் உலகிலோங்கலாம் இனியே

இப்போது சொல்லுங்கள் அவருக்கு ஏதாவது குறை இருந்திருக்குமா?












Saturday 6 April 2013

தமிழின்...


தமிழின்...

முன்புறு  நிலையும் பின்புறு நிலையம்
            முன்னி நின்றுளமயக்  குறுங்கால்
அன்புரு நிலையால் திருநெறித்  தமிழ்கொண்
             டைய நீத் தருளிய  அரசே
என்பு பெண்ணுருவோ  டின்ன யிரது  கொண்
             டெழுந்திடப்  புரிந்துல  கெல்லாம்
இன்புறப்  புரிந்த மறைத் தனிக் கொழுந்தே
              என்னுயிர்க்  குயிர்  எனுங் குருவே